குன்னூரில் விபத்துக்குள்ளான Mi-17V5 ராணுவ ஹெலிகாப்டர் பொதுவாக ராணுவ அதிகாரிகளின் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தது.
ரஷ்யாவால் தயாரிக்கப்பட்ட அதிநவீன ஹெலிகாப்டர் இது .60க்கும் மேற்பட்ட நாடுகள் தங்கள் ராணுவத்தில் இந்த வகை ஹெலிகாப்டர்களை இணைத்துள்ளன. படைகளை குறிப்பிட்ட பகுதிகளில் இறக்கி விடவும் ,களத்தில் காயம் அடைந்த வீரர்களை மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லவும் இத்தகைய ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அதே நேரத்தில் எதிரியைத் தாக்குவதற்கும் அதிகளவில் ஆயுதங்களைக் கொண்டு செல்லவும் திறன் மிக்க ஹெலிகாப்டர் என்றும் கருதப்படுகிறது. இத்தகைய அதிநவீன ஹெலிகாப்டரின் எதிர்பாராத விபத்தில் ஜெனரல் பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்துவிட்டனர்.