மணிப்பூரில் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருளை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றி உள்ளனர்.
அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையினரும், மணிப்பூர் போலீசாரும் இணைந்து மியான்மர் எல்லைப் பகுதியில் உள்ள மேரே என்ற இடத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கிட்டங்கி ஒன்றில் போதைப் பொருள் இருப்பதாக வந்த தகவலையடுத்து அப்பகுதியில் சோதனை நடத்தியதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 54 கிலோ பிரவுன் சுகர், 154 கிலோ மெத்தம் பீட்டமைன் ஆகியவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் சர்வதேச மதிப்பு 500 கோடி ரூபாய் என்றும், இது தொடர்பாக மியான்மர் நாட்டைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.