2020-21 ஆம் நிதியாண்டில் இந்திய விமான நிறுவனங்களுக்கு 19 ஆயிரத்து 564 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட உறுப்பினர் கேள்விக்கு பதில் அளித்து பேசிய மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங், கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 25 முதல் மே 24 வரை உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன என்றார்.
கொரோனா தொற்று குறைந்ததையடுத்து தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் தெரிவித்தார்.