இந்தியப் பெருங்கடலில் உள்ள பவளப் பாறைகள் அடுத்த 50 ஆண்டுகளில் முற்றிலும் அழிந்து விடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து நேச்சர் சஸ்டைனபிலிட்டி என்ற இதழில் வெளியான கட்டுரையில், அதிகரித்து வரும் கடல் வெப்பநிலை மற்றும் அதிகப்படியான மீன்பிடித்தல் ஆகியவை மேற்கு இந்தியப் பெருங்கடலில் உள்ள பவளப்பாறைகளை அடுத்த 50 ஆண்டுகளில் முற்றிலும் அழித்து விடும் நிலைக்குத் தள்ளியிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
இதற்காக அவசர நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையிலும் மொரிஷியஸ் மற்றும் ஷெஷல்ஸ் போன்ற தீவுகளும் அழிந்து விடும் என்று அந்தக் கட்டுரையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.