ஒமிக்ரான் வைரஸ் குறித்து பெரிதாக அச்சப்பட தேவையில்லை, என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில், ஒமிக்ரான் தொற்று பாதித்தோருக்காக 50 படுக்கைகள் கொண்ட தனி சிகிச்சை பிரிவை தொடங்கி வைத்த பின்னர், அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இவ்வாறு தெரிவித்தார்.
ஒமிக்ரான் ஆபத்து அதிகமுள்ள நாடுகளில் இருந்து வருவோரில், இதுவரை 5,249 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் ஈடுபடாமல், பொது நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பங்கேற்றது குறித்து, அவரிடம் விளக்கம் கேட்கப்படும் என தெரிவித்தார்.