நியூசிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 540 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 325 ரன்களும், நியூசிலாந்து அணி 62 ரன்களும் எடுத்தன.
இதனையடுத்து 263 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக மயங் அகர்வால் 67 ரன்களும், சுப்மன் கில் மற்றும் புஜாரா தலா 47 ரன்களும் எடுத்தனர்.