குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வோருக்கு குலுக்கல் முறையில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஸ்மார்ட் போன் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 4ம் தேதியில் இருந்து 10ஆம் தேதி வரை நடைபெறும் சிறப்பு தடுப்பூசி முகாம்களில் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்வோரின் பெயர்கள் சேகரிக்கப்பட்டு, குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு நபருக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என ராஜ்கோட் மாநகராட்சி ஆணையர் அமித் அரோரா அறிவித்துள்ளார்.