ஜெயலலிதா நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த வந்த எடப்பாடி பழனிசாமியின் காரை வழிமறித்து, சசிகலாவுக்கு ஆதரவாக அமமுகவினர் கோஷம் எழுப்பிய நிலையில், பதிலுக்கு அதிமுகவினரும் கோஷம் எழுப்பியதால் இருதரப்பினர் இடையே தள்ளுமுள்ளு உருவானது.
நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு, வீட்டுக்கு திரும்பிய போது எடப்பாடி பழனிசாமியின் காரை வழிமறித்த அமமுகவினர், சசிகலாவுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதோடு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் கார் செல்லும் போது, அதே மாதிரி வழிமறித்ததால் இரு தரப்பினர் தள்ளுமுள்ளு உருவானது.
ஒரு சிலர் அங்கு வைக்கப்பட்டிருந்த பேரி கார்டையும் தூக்கி வீசிய நிலையில், அசம்பாவிதத்தை கட்டுப்படுத்த சிலரை போலீசார் தனியாக இழுத்துச் சென்று சமாதானப்படுத்தினர்.