திருமணம் செய்வதாக கூறி காதலித்து மனிஷ் என்ற நபர் தன்னை ஏமாற்றிவிட்டதாக பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துக் கொண்ட ஜூலி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
பிரபல சலூன் நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் அமிஞ்சிகரையை சேர்ந்த மனிஷ் என்பவரை 4 ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும், அவருக்காக பைக், தங்கச் செயின், பிரிட்ஜ் என சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளதாக ஜூலி தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மதத்தை காரணம் காட்டி தனது பெற்றோர்கள் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை என்று கடந்த செப்டம்பர் மாதம் மனிஷ் தெரிவித்ததாகவும், அதனை தொடர்ந்து மன ரீதியாகவும் , ஏதாவது பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தனக்கு மனிஷ் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாகவும் சென்னை அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் மனிஷை அழைத்து விசாரித்து வருகின்றனர்.