வங்கக்கடலில் உருவான ஜாவத் புயல் ஆந்திராவை நெருங்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அம்மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
புயலின் தாக்கத்தால் வட கடலோர ஆந்திராவின் ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அம்மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 54 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 11 குழுக்கள், மாநில பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 5 குழுக்கள் நிவாரண பணிகளுக்காக அப்பகுதிகளுக்கு விரைந்துள்ளனர்.
இந்நிலையில் புயல் நெருங்க வாய்ப்புள்ள ஒடிசாவின் புரி கடற்கரையில் உள்ள சிறிய வகை கடைகள் உள்ளிட்டவை அகற்றப்பட்ட நிலையில், அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல ஒலிபெருக்கிகள் மூலம் அறிவுறுத்தப்பட்டது.