மூன்றாவது டோஸ் பூஸ்டர் தடுப்பூசி மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசி போன்றவை குறித்து தீவிரமான ஆய்வுகளுக்குப் பிறகே முடிவெடுக்கப்படும் என்றும் அவசரப்படவோ இதனை அரசியலாக்கவோ கூடாது என்றும் மத்திய சுகாதார அமைச்சர் மான்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
மருத்துவ நிபுணர் குழுவினரின் அறிவியல் மற்றும் அனுபவ அறிவின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படுவதாகவும் மக்களவையில் அவர் விளக்கினார்.கொரோனா ஒமிக்ரான் பாதிப்புகள் குறித்து நேற்று நடைபெற்ற 11 மணி நேர நீண்ட விவாதத்தில் பங்கேற்று விளக்கம் அளித்த மாண்டவியா, இந்தியாவில் சுமார் மூன்றரை கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அதில் பெரும்பாலோர் மீண்டு விட்டதாக கூறினார்.
இதுவரை 4 லட்சத்து 36 ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழந்ததாகவும் அவர் கூறினார், உலக அளவில் இது மிகவும் குறைந்த எண்ணிக்கை என்றும் அவர் குறிப்பிட்டார்.