சென்னை வடபழனியில் திரைப்படத் தயாரிப்பாளர் பி.டி செல்வக்குமாரின் கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற நடிகர் ஹரிஷ் கல்யாண், பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மழைக்கால நிவாரணமாக 5 கிலோ எடை கொண்ட அரிசிப் பையை வழங்கினார்.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 80க்கும் மேற்பட்ட பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரணம் வழங்கிய பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஹரிஷ் கல்யாண், உண்மையான கதாநாயகர்கள் ஆட்டோ டிரைவர்கள் தான் என்றும் பெண்களுக்கான தனி ஆட்டோ நிறுத்தம், தனி செயலி உருவாக்க தான் உதவத் தயாராக இருக்கிறேன் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து, பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் கேட்டுக் கொண்டதால் சினிமா பாடல் ஒன்றையும் பாடினார்.