அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சசிகலாவுக்கு ஆதரவாக தொண்டர் ஒருவரிடம் பேசுவது போன்ற ஆடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அது தனது குரல் அல்ல என அவர் மறுத்துள்ளார்.
குவைத்திலிருந்து சக்திவேல் ராஜன் என்ற நபரும் செல்லூர் ராஜுவும் பேசுவது போன்ற அந்த ஆடியோவில், சசிகலாவை கட்சியில் சேர்க்கும் வேலைகள் நடைபெற்று வருவதாகவும் அது முறையாக நடைபெறும் வரை பொறுமையாக இருக்குமாறும் செல்லூர் ராஜு கூறுவதுபோல் பதிவாகியுள்ளது.
இந்த ஆடியோ இணையத்தில் வைரலான நிலையில், கட்சியின் வளர்ச்சி பிடிக்காமல் குழப்பம் ஏற்படுத்துவற்காக யாரோ செய்த சதி என்றும் அது தனது குரலே அல்ல என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். தன்னைப் போலவே பேசுவதற்கு யாரோ முயற்சி செய்திருக்கிறார்கள் என்றும் ஆடியோவை வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.