புதுச்சேரி ரெயின்போ நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் செப்டிக் டேங்கிற்குள் சிக்கி கொண்டு 5 நாட்களாக உயிருக்கு போராடிய நாயை, விலங்கு நல ஆர்வலர்கள் பத்திரமாக மீட்டனர்.
எழில் நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டத்தில், கனமழை காரணமாக கட்டிடப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதால், செப்டிக் டேங்க் அமைப்பு மூடப்படாமல் உள்ளது.
இந்நிலையில், அப்பகுதியை சார்ந்த நாய் ஒன்று மழை காரணமாக கட்டிடத்தில் ஒதுங்கிய போது, தவறி செப்டிக் டேங்க்-க்குள் விழுந்துள்ளது. இதனையடுத்து பணிக்கு சென்ற ஊழியர் ஒருவர் விலங்குகள் நல அமைப்பிற்கு தகவல் கொடுத்துள்ளார்.