மெக்சிகோவில் சினிமா பாணியில் சிறைச்சாலை முன் கார் குண்டுகளை வெடிக்கச் செய்து போலீசாரை திசைத்திருப்பி கைதிகளை தப்பிக்கச் செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
ஹிடால்கோ மாகாணத்தின் டுலா நகர சிறைச்சாலையில் இருக்கும் ரவுடிக் கும்பலின் தலைவனை வெளியே கொண்டு வர திட்டமிட்ட சக ரவுடிகள் சிறையின் முன் காவலுக்கு நின்ற போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, 2 கார் குண்டுகளை வெடிக்கச் செய்தனர்.
சம்பவ இடத்தில் போலீசார் குவிந்த நிலையில் திட்டத்தை அமல்படுத்திய கும்பல் சிறையில் இருந்த 9 கைதிகளை வெளியே கொண்டு வந்துள்ளனர்.