தென்னாப்பிரிக்கா, ஹாங்காங் உள்ளிட்ட 12நாடுகளில் இருந்து விமானம் மூலம் வந்த 138 பேரின் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டதாகவும் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு சென்னை எழும்பூரில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் ஒரு கோடியே 13லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன என்றார்.