நவம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி மூலம் ஒரு இலட்சத்து 31 ஆயிரத்து 526 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
முந்தைய ஆண்டின் இதே காலத்தை ஒப்பிடும்போது இது 25 விழுக்காடு அதிகமாகும். ஜிஎஸ்டி வரிமுறை அறிமுகப்படுத்தப்பட்ட பின் கிடைத்த மாதாந்திர வரி வருவாயில் இது இரண்டாவது அதிகத் தொகையாகும்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒரு இலட்சத்து 41 ஆயிரத்து 384 கோடி ரூபாய் வரி வருவாய் ஈட்டியதே முதல் அதிகத் தொகையாகும்.அக்டோபர், நவம்பர் எனத் தொடர்ந்து இரு மாதங்களில் வரி வருவாய் ஒரு இலட்சத்து முப்பதாயிரம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளதும் குறிப்பிடத் தக்கது.
நாட்டின் பொருளாதாரம் மீட்சியடைந்துள்ளதை இது காட்டுவதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.