எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளியால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் உறுப்பினர்கள் 12 பேர் நடப்புக் கூட்டத் தொடர் முழுமைக்கும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இன்று அவை கூடியதும் இது தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசத் தொடங்கியதும் அதற்கு அவைத் தலைவர் அனுமதிக்கவில்லை.
இதையடுத்து உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் முதலில் நண்பகல் வரையும், அதன்பின் பிற்பகல் இரண்டு மணி வரையும் அவை ஒத்தி வைக்கப்பட்டது.
மீண்டும் அவை தொடங்கியதும் ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் அணைப் பாதுகாப்புச் சட்ட மசோதாவைக் கொண்டுவந்தார். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.