நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துவிட்டதாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா சென்று திரும்பிய கமல்ஹாசனுக்கு கடந்த நவம்பர் 22ஆம் தேதி கொரோனா உறுதியானதையடுத்து அவர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்த அவர் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டுவிட்டதாகவும், இருப்பினும், டிசம்பர் 3ஆம் தேதி வரை அவரை தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.