பெட்ரோல் மீதான மதிப்புக் கூட்டுவரியை டெல்லி அரசு 30 விழுக்காட்டில் இருந்து 19 புள்ளி 4 விழுக்காடாகக் குறைத்துள்ளது.
நவம்பர் 4 முதல் பெட்ரோல் மீதான உற்பத்தி வரியை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் மீதான உற்பத்தி வரியை லிட்டருக்குப் பத்து ரூபாயும் மத்திய அரசு குறைத்துக் கொண்டது.
இதையடுத்துப் பாஜக ஆளும் மாநிலங்களிலும், அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியைக் குறைத்ததால் அங்கு விலை ஓரளவு குறைந்தது.
இந்நிலையில் டெல்லி அரசு பெட்ரோல் மீதான மதிப்புக் கூட்டுவரியை 19 புள்ளி 4 விழுக்காடாகக் குறைப்பதாக அறிவித்துள்ளது. இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 8 ரூபாய் குறையும் என்றும், இந்த விலைக் குறைப்பு நாளை முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.