மாநிலங்களவை உறுப்பினர்கள் 12 பேரைக் குளிர்காலக் கூட்டத் தொடர் முழுமைக்கும் இடைநீக்கம் செய்ததைத் திரும்பப் பெறக் கோரி நாடாளுமன்றத்தின் காந்தி சிலை முன் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மழைக்காலக் கூட்டத் தொடரில் அவையில் நடுப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டதாகக் கூறிப் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் 12 பேரை இந்தக் கூட்டத்தொடர் முழுமைக்கும் இடைநீக்கம் செய்து மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய நாயுடு நடவடிக்கை எடுத்தார்.
இதனால் உறுப்பினர்கள் அவையின் நடவடிக்கைகளில் பங்குபெற முடியாமல் போகும் எனக் கூறி இந்த முடிவைத் திரும்பப் பெற எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.