துருக்கியில் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறாவளிக் காற்றில் ராட்சத இரும்புத் தகடு தலையில் விழ இருந்த நிலையில் அதிலிருந்து ஒருவர் நூலிழையில் தப்பிய வீடியோ இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
அதேபோல் ஒரு கடையின் முன் வைக்கப்பட்டு இருந்த வாஷிங் மிஷின் வீசிய சூறாவளிக் காற்றில் தானாக நகர்ந்து சென்றது.
இஸ்தான்புல் மார்மரா கடல் பகுதியில் வீசிய சூறாவளிக் காற்றால் சரக்கு கப்பல்கள் நிலை குழைந்து போயின. சில கப்பல்கள் கடலில் கவிழும் நிலைக்கு தள்ளப்பட்டன.