ஒமிக்ரான் வகை கொரோனா தொற்றுப் பரவல் அச்சத்தால் அமெரிக்க நிதிச் சந்தைகளில் தேக்க நிலை ஏற்படும் எனப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் முதலில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று இதுவரை ஒன்பது நாடுகளில் பரவியுள்ளது. இது விரைவாகப் பரவும் தன்மை கொண்டது என்றும், இப்போதைய தடுப்பூசிகளால் கட்டுப்படுத்த முடியாது என்றும் மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால்உலக அளவில் பங்குச்சந்தைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதுடன், கச்சா எண்ணெய் விலையும் 10 விழுக்காடு சரிந்துள்ளது. அமெரிக்கப் பங்குச்சந்தைகளிலும் சரிவு ஏற்பட்டுள்ளதுடன், அரசின் பத்தாண்டுக் கடன்பத்திரங்களின் மதிப்பும் வீழ்ச்சியடைந்துள்ளது.
பணவீக்கம், பொருளாதார வீழ்ச்சி ஆகியவற்றின் விளைவாக நிதிச் சந்தையில் தேக்கம் ஏற்படும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.