52வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், பிரிக்ஸ் அமைப்பின் சிறந்த நடிகருக்கான விருதை அசுரன் படத்தில் நடித்த நடிகர் தனுஷ் பெற்றார்.
இவ் விழாவில் ஜப்பானிய திரைப்படம் ‘ரிங் வாண்டரிங்’ தங்க மயில் விருதை வென்றது.சிறந்த இயக்குனருக்கான வெள்ளி மயில் விருதை, ‘சேவிங் ஒன் ஹூ இஸ் டெட்’ படத்தின் இயக்குனர் வேக்லவ் கதர்ன்கா வென்றார்.
நடிகர்கள் ஜித்தேந்திர பிகுலால் ஜோஷி, நிஷிகாந்த் காமத் ஆகியோர் சிறந்த நடிகருக்கான வெள்ளி மயில் விருதை வென்றனர். ஸ்பெயின் நடிகை ஏஞ்சலா மோலினா சிறந்த நடிகைக்கான வெள்ளி மயில் விருதை வென்றார்.