அளவுக்கு அதிகமான அகதிகளை ஏற்றிக் கொண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு தப்ப முயன்று மத்திய தரைக்கடல் பகுதியில் தத்தளித்த படகில் இருந்து 93 குழந்தைகள் உள்பட 487 பேரை மீட்டதாக துனிசிய கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசியல் ஸ்திரத்தன்மை இன்மை, பொருளாதார மந்தநிலை உள்ளிட்டவைகளால் வாழ்வாதாரம் பாதித்த எகிப்து, சிரியா, சூடான், பாகிஸ்தான், எத்தியோப்பிய மற்று பாலீஸ்தீன நாட்டு மக்கள், துனிசியா மற்றும் லிபியா நாடுகள் வழியாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.
அப்படி அகதிகளை ஏற்றி வந்து நடுக்கடலில் சிக்கிக் கொண்ட படகில் இருந்து 93 குழந்தைகள், 13 பெண்கள் உள்பட 487 பேரை மீட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.