தீவிரவாதிகளுக்கு எதிரான போரில், நேரடியாக பங்கேற்க விரும்புவதாக, எத்தியோப்பிய தடகள வீரர் ஹெயில் ஜெர்செலாசி தெரிவித்துள்ளார்.
ஒரு விளையாட்டு வீரர் என்ற முறையில், நான் அமைதித் தூதராக செயல்படலாம், என பொதுமக்கள் கருதினாலும், தீவிரவாத குழுவினருக்கு எதிரான போரில், பிரதமரே எல்லைக்கு சென்று, படைகளுக்கு நேரடியாக கட்டளை பிறப்பிக்கும் நிலையில், தானும் போர்க்களத்திற்கு செல்ல விரும்புவதாக குறிப்பிட்டார்.
சிட்னியில் இரண்டாயிரமாவது ஆண்டில் நடைபெற்ற ஒலிம்பிக்கில், 10 ஆயிரம் மீட்டர் தடகளப் போட்டியில், ஹெயில் ஜெர்செலாசி தங்கப் பதக்கம் வென்றவர். உள்நாட்டுப் போரால், எத்தியோப்பியாவில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 20 லட்சம் பேர், தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.