பாகிஸ்தானில் பறிமுதல் செய்யப்பட்ட 130 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான 18 மெட்ரிக் டன் போதைப் பொருள் தீயிட்டு கொளுத்தப்பட்டது.
இஸ்லாமாபத்தில் நடந்த நிகழ்வில் தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு தலைவர் குல்காம் ஷபீர் தலைமையில் போதைப் பொருள் தீயிட்டு கொளுத்தி சாம்பலாக்கப்பட்டது.
ஹஷீஷ், ஓப்பியம், ஹெராயின், கேடமைன், கொக்கைன் உள்ளிட்ட பல்வேறு வகையிலான போதைப் பொருட்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டதாகவும், கடந்த ஒராண்டில் மட்டும் 184 மெட்ரிக் டன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக குல்காம் ஷபீர் தெரிவித்தார்.