கர்நாடக மேலவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் தனக்கு ஆயிரத்து 743 கோடி ரூபாய்க்கு சொத்து மதிப்பு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உம்ரா டெவலப்பர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருபவர் 54 வயதான யூசுப் ஷெரீப். இவர் கர்நாடக மேலவைத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சி தலைமையிடம் விண்ணப்பத்திருந்தார். இந்நிலையில், 20 பேர் கொண்ட பட்டியலில் அவரது பெயரும் இடம்பெற்றது. 5ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள யூசுப்பிடம் தற்போது இரண்டு ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
அதில் ஒன்று நடிகர் அமிதாப் பச்சனிடம் வாங்கியதும், கோலார் தங்கச் சுரங்கத்தில் தங்கத் தாதுவை சுத்தம் செய்யும் ஒப்பந்தப் பணிகளை யூசுப் எடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.