ராமாயண சுற்றுலா விரைவு ரயில் பணியாளர்களின் காவி சீருடைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சீருடை மாற்றப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
அயோத்தி, நாசிக், ராமேஸ்வரம் உட்பட ராமாயணத்துடன் தொடர்புள்ள 15 புனித தலங்களுக்கு செல்லும் இந்த ரயிலில் பணியாளர்கள் காவி சீருடை அணிந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.பல்வேறு தரப்பில் இருந்து வந்த எதிர்ப்பை அடுத்து, பணியாளர்களின் சீருடை மாற்றப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், சுற்றுலாவை மேம்படுத்த பாரத கௌரவம் தலைப்பில் சுமார் 180 புதிய ரயில்களை மத்திய அரசு இயக்க இருப்பதாக தெரிவித்தார்.இதற்கான 3033 ரயில் பெட்டிகள் தயார் நிலையில் இருப்பதாக அவர் கூறினார்.