இந்திய வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்து விட்டு எடுத்துச் செல்லப்பட்ட அனைத்து பணமும் திருப்பி கொண்டுவரப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஜம்முவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது பேசிய அவர், கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் இந்தியாவில் அல்லது வெளிநாட்டில் இருந்தாலும், அவர்கள் மீதான வழக்குகளை மத்திய அரசு தீவிரமாக நடத்தி வருவதாக கூறினார்.
மத்தியில் 2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பின் எடுக்கப்பட்ட பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகள் வாராக் கடனை குறைத்துள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.