கேரளாவில் ஐஸ் கிரீம் பந்தில் இருந்த வெடி குண்டு வெடித்த விபத்தில் 7ஆம் வகுப்பு மாணவன் படுகாயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தர்மாதாம் நகரில் கிழே கிடந்த ஐஸ்கிரீம் பந்தை எடுத்து சிறுவன் ஸ்ரீவர்த் பிரதீப் விளையாடிக் கொண்டு இருந்த போது அதனுள் இருந்த வெடி குண்டு வெடித்ததாக கூறப்படுகிறது.
சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் குடியிருப்பு பகுதியில் வெடிகுண்டு எப்படி வந்தது என போலீசார் விசாரித்து வருகின்றனர்.