கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் தேவை என்பதற்கு அறிவியல்பூர்வமான ஆதாரம் எதுவும் இல்லை என ஐசிஎம்ஆர் தலைமை இயக்குநர் Dr.பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.
செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இதை தெரிவித்த அவர், வயது வந்த அனைவருக்கும் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை போட்டு முடிப்பதே அரசின் முன்னுரிமையாக உள்ளதாக கூறினார்.
இதனிடையே தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் கூட்டத்தில், பூஸ்டர் டோஸ் போடுவது குறித்து நிபுணர்கள் விவாதிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.