விசாகப்பட்டினத்தில் டெம்போவில் வைத்து கடத்திய 3 ஆயிரத்து 402 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மடுகுலா கிராம எல்லையில் சோதனையில் ஈடுபட்ட சிறப்பு அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சந்தேகத்திற்கு இடமாக வந்த டெம்போவை சோதனையிட்ட போது 81 பைகளில் கஞ்சா சிக்கியுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு இரண்டரை கோடி ரூபாய் வரை இருக்கும் என்றும், கைதான 2 பேரும் கூலிக்கு பணியமர்த்தப்பட்டவர்கள் என்றும் முக்கிய குற்றவாளிகளை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
விசாகப்பட்டினம் மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவில் இதுதான் அதிகபட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.