திருப்பதி கனமழை காரணமாக திருமலை - திருப்பதி தேவஸ்தானத்திற்கு 4 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 17, 18,19 ஆகிய தேதிகளில் 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் திருப்பதி மலையில் அதிகன மழை பெய்தது. இதன் காரணமாக திருப்பதி மலைப்பாதைகள், பயன்படுத்தப்படும் வழித்தடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. மேலும் திருப்பதி மலையில் உள்ள பல்வேறு பகுதிகளில் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன.
இந்த சேதத்தை தேவஸ்தான பொறியியல் நிபுணர்கள் மதிப்பீடு செய்துள்ளனர். இதனிடையே, மழை காரணமாக திருமலையில் சுவாமி தரிசனத்திற்கு முன்பதிவு செய்த தேதியில் வர இயலாத பக்தர்கள், மழை பாதிப்பு குறைந்த பின் அதே டிக்கெட்டில் ஏழுமலையானை வழிபடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.