ஜம்மு- காஷ்மீரில், சிவப்பு நிறத்தில் பூத்துக் குலுங்கும் சினார் மரங்களை காண, சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
ஸ்ரீநகரில் உள்ள முகலாய தோட்டத்தில் கூடும் மக்கள், அவற்றுக்கு அருகே நின்று புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். சுமார் 500 ஆண்டுகளுக்கு மேல் வரை, ஆயுட்காலம் கொண்ட இந்த சினார் மரங்கள், காஷ்மீரில் பரவலாக காணப்படுகிறது. பனிக்காலத்தில் இதன் இலைகள் பச்சை நிறத்தில் இருந்து, இளஞ்சிவப்பு நிறத்திற்கு மாறி உதிரத் தொடங்கும்.
அந்தவகையில் இந்த பூங்காவின் தரையை, சினார் இலைகள் போர்வை போல் மூடியுள்ளன.