கடந்த 15 ஆண்டுகளை விட நடப்பாண்டில் அமேசான் காடுகள் அழிக்கப்படும் வேகம் அதிகரித்திருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பிரேசிலின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஒரு வருடத்தில் காடழிப்பு 22 விழுக்காடு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. புவி வெப்பமடைதலின் வேகத்தைப் பெருமளவு கட்டுப்படுத்துவதில் அமேசான் காடுகள் பெரும் பங்கு வகிக்கின்றன.
சமீபத்திய தரவுகளின்படி, 2020-21ம் ஆண்டு காலகட்டத்தில் சுமார் 13 ஆயிரத்து 235 சதுர கிலோ மீட்டர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன.இது 2006 க்குப் பிறகு அதிக அளவு என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ ஆட்சியின் கீழ் அமேசான் காடுகளை அழிப்பது அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.