சட்டவிரோதமாக செயல்படும் 600 கடன் ஆப்களை ரிசர்வ் வங்கியின் குழு அடையாளம் கண்டுள்ளது.
ஆண்ட்ராய்ட் செல்போன் பயன்படுத்துகிறவர்கள் பல்வேறு அவசர பணத்தேவைகளுக்கு லோன் ஆப்களை பயன்படுத்துகின்றனர். கடன் தந்து உதவும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் சுமார் 600 மோசடியான சட்டவிரோத லோன் ஆப்களும் இயங்குவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டில் சுமார் 2500 புகார்கள் எழுந்ததையடுத்து ரிசர்வ் வங்கியின் குழு சட்டவிரோதமாக செயல்படும் ஆப்களை அடையாளம் கண்டுள்ளது.