உலகிலேயே வெளிநாடுகளில் இருந்து தாயகத்திற்கு அதிக பணம் அனுப்புவதில் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
நடப்பாண்டில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட தொகையின் மதிப்பு 87 பில்லியன் அமெரிக்க டாலர் என்றும் இதில் 20 சதவீதத்துக்கும் மேலான அமெரிக்காவில் இருந்து வந்திருப்பதாகவும் உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு இந்தியாவுக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுப்பிய பணம், கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்துக்குப் பெரிய அளவில் பங்களித்ததாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
இந்தியாவைத் தொடர்ந்து சீனா, மெக்சிகோ, பிலிப்பைனஸ், எகிப்து ஆகிய நாடுகளுக்கும் வெளிநாடுகளில் இருந்து அதிகம் பணம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.