நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரை அமைதியாகவும், சுமூகமாகவும் நடத்த அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்புத் தரவேண்டும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், நாடாளுமன்றத்தில் ஒழுங்கின்மை, இடையூறுகள் மற்றும் சலசலப்புகள் அதிகரித்து வருவதை அடுத்து, பேச வேண்டிய அவசியம் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பெகாசஸ் உளவு, லக்கிம்பூர் வன்முறை, புதிய வேளாண் சட்டங்கள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்கட்சிகள் முனைப்பு காட்டுவதால், வரும் கூட்டத் தொடரில் சலசலப்பு அதிகம் காணப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.