நிலவு வட்டப் பாதையில் இந்தியா- அமெரிக்கா விண்கலங்கள் ஒன்றோடு ஒன்று மோதுவதைத் தவிர்த்து இருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் 20 ஆம் தேதி நிலவு சுற்றுப் பாதையில் இஸ்ரோ தயாரித்த சந்திரயான் 2 விண்கலத்தின் ஆர்பிட்டரும் அமெரிக்காவின் நாசாவுக்கு சொந்தமான லூனார் எல்.ஆர்.ஓ என்ற விண்கலத்தின் ஆர்பிட்டரும் ஒன்றுடன் ஒன்று மோத இருந்தன.
இரு விண்கலங்களுக்குமான இடைவெளி 100 மீட்டருக்கும் குறைவாக இருந்தது. இதனைக் கண்டுபிடித்த இஸ்ரோ மற்றும் நாசா விஞ்ஞானிகள் துரித நடவடிக்கை எடுத்தனர்.இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.