சென்னை பாரிமுனையில் உள்ள மளிகைக்கடையில் ஒரு கோடியே 50 லட்ச ரூபாய் கையாடல் செய்ததாக ஊழியர் கைது செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாகி இருந்த 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
வைரவேல் ஸ்டோர்ஸ் என்ற மளிகைக் கடையில் ஒரு கோடியே 50 லட்ச ரூபாயைக் கையாடல் செய்து தன் வங்கிக் கணக்கு, மனைவி, தம்பி மற்றும் மைத்துனி வங்கிக் கணக்குகளிலும் செலுத்தியதாக ஊழியர் வேல்முருகன் கைது செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவான மனைவி பூர்ணிமா, மைத்துனி வினோதாவை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் தேனி ஆண்டிப்பட்டியில் இருவரையும் கைது செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.