டெல்லியில் காற்றுமாசைக் கட்டுப்படுத்த வரும் ஞாயிற்றுக் கிழமை வரை கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
காற்றுத்தர மேலாண்மை ஆணையத்தின் அறிவுறுத்தல்களைச் செயல்படுத்துவது குறித்து மாநிலச் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தலைமையில் பல்துறை அலுவலர்களின் கூட்டம் நடைபெற்றது. அதன் பின் பேசிய அமைச்சர், கட்டுமானப் பணிகளுக்கான தடை நவம்பர் 21 வரை நீடிக்கும் எனத் தெரிவித்தார்.
அரசுத் துறையினர் வீட்டிலிருந்தே பணியாற்றுவர் என்றும், மறு உத்தரவு வரும் வரை பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவித்தார்.
இன்றியமையாப் பொருட்கள், பணிகளுக்கான வாகனங்களைத் தவிர மற்ற வாகனங்கள் டெல்லிக்குள் நுழையத் தடை விதித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.