கொரோனா காலகட்டத்தில் ரயில்கள் ஸ்பெஷல் ரயில்களாக இயக்கப்பட்டதால் உயர்த்தப்பட்ட பயணியர் கட்டணம் மீண்டும் பழைய விகிதத்திற்கு மாற்றப்படுவதால், கட்டணம் சுமார் 15 சதவிகிதம் வரை குறைக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா காலத்தில் ஸ்பெஷல் என்ற பெயருடன் இயக்கப்பட்ட சுமார் 1700 ரயில்களை, பழைய பெயரில் இயக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மண்டல ரயில்வே அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கவுன்டரில் டிக்கெட் விற்பனை செய்வது மீதான கட்டுப்பாடுகள், ரயில்களில் சமைத்த உணவுகளை பரிமாற தடை, உயர்ந்த நடைமேடைக்கட்டணம் ஆகியன தொடரும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.