ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம், மீண்டும் உயர்த்தப்பட உள்ளது.
இதற்கான அறிவிப்பு புத்தாண்டின் முதல் வாரத்தில் வெளியாகலாம், என தகவல் வெளியாகியுள்ளது.
தீபாவளியின் போது மத்திய அரசு ஊழியர்களுக்கான பஞ்சப்படி, 3 சதவீதம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது புத்தாண்டு பரிசாக வீட்டு வாடகைப்படி உயர்த்தப்பட உள்ளது. இதற்கான ஆலோசனை மற்றும் முதல்கட்ட நடவடிக்கைகளை, மத்திய நிதியமைச்சகம் தொடங்கியுள்ளது.