ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து மும்பை வந்த இந்திய கிரிக்கெட் அணி ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவிடம் இருந்து 5 கோடி ரூபாய் மதிப்புள்ள கைக்கடிகாரம் பறிமுதல் செய்யப்பட்டதாக வெளியான தகவலுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு அமீரகம் சென்ற பாண்ட்யா மும்பை விமான நிலையம் வந்தடைந்தார். அவரைச் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்ட போது போதிய ஆவணங்கள் இல்லாத 5 கோடி ரூபாய் மதிப்புள்ள கைக்கடிகாரம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து விளக்கமளித்த பாண்ட்யா, தான் சட்டப்பூர்வமாக வாங்கிய அனைத்து பொருட்களைப் பற்றியும் தாமாக அதிகாரிகளிடம் தெரிவித்ததாகவும், தான் செலுத்த வேண்டிய தொகையை செலுத்த தயாராக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
class="twitter-tweet"> — hardik pandya (@hardikpandya7) November 16, 2021மேலும், அக்கடிகாரத்தின் மதிப்பு தோராயமாக ஒரு கோடியே 50 லட்ச ரூபாய் என்றும், 5 கோடி ரூபாய் என்பது பொய்யான தகவல் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.