நெஞ்செரிச்சல், அஜீரணம்,வாயுத் தொல்லை போன்றவற்றுக்காக எடுத்துக் கொள்ளப்படும் antacid மருந்துகளால் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் என்ற அறிவிப்பை அந்த மருந்துகளின் பாக்கெட்டுகளில் அச்சிட வேண்டும் என தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் உத்தரவிட்டுள்ளார்.
Pantoprazole, Omeprazole, Lansoprazole, Esomeprazole மற்றும் இவை அடங்கிய கூட்டு மருந்துகளாக antacid மருந்துகள் விற்கப்பட்டு வருகின்றன. இந்த மருந்துகளை நீண்ட நாள் எடுத்துக் கொண்டால் மிகவும் அபாயகரமான பின்விளைவுகள் ஏற்படும் என அண்மையில் சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
இந்த மருந்துகளை நீண்டகாலம் பயன்படுத்தினால் சிறுநீரக பாதிப்பு, தீவிர சிறுநீரக நோய் ஏற்படுவதுடன் சிலருக்கு வயிற்றில் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பான்-டி, பான், பான்டாப்-டி, பான்டாசிட்-டி என பல்வேறு வணிகப்பெயர்களில் இந்த மருந்துகள் விற்பனையாகின்றன.