எதிரிகளை நிலைகுலையச் செய்வதற்கு புதிய மின்னணு போர் உத்தியை இஸ்ரேல் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
அந்நாட்டின் வானியல் தொழிற்கழகம் வீடியோ ஒன்றினை வெளியிட்டது. அதில் எதிரி விமானங்கள் மற்றும் தளவாடங்கள் மீது மின்காந்த அலைகளை ஒரே இடத்தில் குவியக்கூடிய கற்றைகளாக அனுப்பப்படுகிறது. இந்த ஒளிக்கற்றை ரேடார், சென்சார் உள்ளிட்ட அமைப்புகளைச் சீர்குலைக்கும் தன்மை கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் எதிரி நாட்டு விமானங்களோ, வாகனங்களோ நிலைகுலைந்து போகும் என கூறப்படுகிறது. பாதுகாப்புச் செலவை பெருமளவு குறைக்கும் இந்த தாக்குதல் அமைப்புக்கு பீம்ஸ் என இஸ்ரேல் பெயரிட்டுள்ளது.