மகாராஷ்டிர மாநிலம் தானே மாநகராட்சியில் தடுப்பூசி போடாதவர்கள் மாநகர பேருந்துகளில் பயணம் செய்ய முடியாது என தானே மேயர் நரேஷ் மாஸ்கே அறிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், மாநகராட்சி பேருந்துகளில் பயணம் செய்ய தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் அல்லது யுனிவர்சல் பாஸ் கட்டாயமாகும் என்றார். ஒரு டோஸ் தடுப்பூசி கூட போடாதவர்கள் தானே மாநகராட்சி பேருந்துகளில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.
அதுபோல குஜராத் மாநிலம் சூரத்திலும் 2-வது டோஸ் தடுப்பூசி போடாதவர்கள் நாளை முதல் மாநகர பேருந்துகளில் பயணம் செய்ய அனுமதி இல்லை என்று சூரத் மாநகராட்சி ஆணையர் பஞ்சநிதி பானி அறிவித்துள்ளார்.