சீனா அனுப்பி வைத்த 20 ஆயிரம் டன்கள் ஆர்கானிக் உரத்தை, தரத்தில் குறைபாடு இருப்பதாகக் கூறி இலங்கை அரசு நிராகரித்து விட்டது. இதனால் இருநாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு வலுத்துள்ளது.
இலங்கையை முழுமையான ஆர்கானிக் உரம் விளைவிக்கும் நாடாக மாற்ற சீனா ஒப்பந்தம் போட்டது.இதன்படி முதல் சரக்கு டெலிவரி அனுப்பி வைக்கப்பட்டது.ஆனால் அனுப்பி வைத்த மாதிரிகளை பரிசோதித்ததில் சீனா அனுப்பிய ஆர்கானிக் உரம் பயிர் விளைச்சலை பாதிக்கும் வகையில் குறைந்த தரத்தில் இருப்பதாக கூறி இலங்கை நிராகரித்துவிட்டது.
அந்த உரத்தில் பாக்டீரியா இருப்பதை கண்டுபிடித்ததாகவும் அது கேரட், உருளை பயிர்களுக்குத் தீங்கிழைக்கும் என்றும் இலங்கையின் வேளாண்துறை இயக்குனர் அஜந்தா தேவி தெரிவித்துள்ளார்.