சென்னைப் புறநகர் ரயில்களில் பயணிக்கக் கொரோனா சூழலில் விதித்திருந்த கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 15 திங்கட்கிழமை முதல் அனைத்துப் பிரிவைச் சேர்ந்த பயணிகளும் நேரக் கட்டுப்பாடுகள் இன்றிச் சென்னைப் புறநகர் ரயில்களில் பயணிக்கலாம்.
முன்பதிவில்லாப் பயணச் சீட்டு, சென்று திரும்பும் பயணச் சீட்டு, சீசன் டிக்கெட்கள் அனைத்துப் பிரிவுப் பயணிகளுக்கும் வழங்கப்படும். எனினும் பயணிகள் கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றி முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றும்படி கேட்டுக்கொண்டுள்ளது.